காதலனுடன் வீட்டில் இருந்த போது யோசனை வந்தது! தனக்கு அடித்த அதிர்ஷ்டம் குறித்து விளக்கிய கனடிய இளம்பெண்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இளம்பெண்ணுக்கு லொட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்துள்ள நிலையில் மகிழ்ச்சியுடன் அது குறித்து அவர் பேசியுள்ளார்.

பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் விக்டோரியா நகரை சேர்ந்தவர் லவுரா ரம்ஸ்டன்.

இளம்பெண்ணான இவர் தனது காதலனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த போது Set for Life என்ற சுரண்டல் லொட்டரி டிக்கெட்டை வாங்கி விளையாட முடிவு செய்தார்.

இதையடுத்து அந்த லொட்டரிக்கு $100,000 பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து லவுரா கூறுகையில், லொட்டரி டிக்கெட்டை வாங்கியவுடன் எனக்கு பரிசு விழும் என உள்ளுணர்வு சொன்னது.

அது போலவே பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது. முதலில் இந்த செய்தியை என் காதலனுக்கு சொன்னேன், பிறகு குடும்பத்தாரிடம் கூறினேன்.

பரிசு பணத்தில் முதலில் எனக்கு உள்ள கடனை அடைக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்