ரொரன்றோவில் துப்பாக்கிச்சூடு... ஒருவர் பலி: குற்றவாளிகள் தப்பியோட்டம்!

Report Print Balamanuvelan in கனடா

ரொரன்றோ சாலை ஒன்றில் இருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.

ரொரன்றோவில் உள்ளூர் நேரப்படி காலை 11.40 மணிக்கு St Clair Avenueக்கும் St Clarens Avenueக்கும் நடுவில் உள்ள சாலையில் ஒருவரை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த பொலிசார் அந்த நபருக்கு முதலுதவி செய்து அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

அவரை சுட்டவர்கள் என கருதப்படும் இருவர் துப்பாக்கியுடன் தப்பியோடும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

கொல்லப்பட்டவர் யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்