கனடா மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கொரோனா பரவலைக் கண்காணித்து, அதுபற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான அறிதிறன் பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் இதுவரை மொத்தமாக 100,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதில் 8,346 பேர் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 63,003 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்த கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், கொரோனா பரவலைக் கண்காணித்து, அதுபற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான அறிதிறன் பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அவா்களது ரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவா் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்