கனடாவில் தேடுதல் வேட்டையில் இறங்கிய மோப்ப நாய்! மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உள்ள பூங்கா அருகில் 4 வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Cardston கவுண்டியில் 4 வயது குழந்தை சனிக்கிழமை காணாமல் போனதாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் தன்னார்வலர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பொலிஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஞாயிறு அன்று அங்குள்ள பூங்காவின் அருகில் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

குழந்தை எவ்வாறு இறந்தது என தெரியாத நிலையில் அது ஆணா அல்லது பெண்ணா என்ற விபரத்தையும் பொலிசார் வெளியிடவில்லை.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதன் முடிவில் முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்