மன நல பிரச்சினை கொண்ட கனேடியரை சுட்டுக்கொன்ற பொலிசார்: ஒன்றாரியோவில் திரண்ட மக்கள்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் மன நல பிரச்சினை ஒன்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஒன்றாரியோவில் வாழும் இஜாஸ் சவுத்ரி (62), சைஷோபெர்னியா என்னும் பிரச்சினை கொண்டவர்.

இல்லாததை இருப்பது போல் கற்பனை செய்துகொள்ளும் பிரச்சினை கொண்ட சவுத்ரிக்கு, பொலிசைக் கண்டால் பயம்.

அப்படியிருக்கும் நிலையில், ஒரு நாள் மன நல பாதிப்பு அதிகரித்ததையடுத்து மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார் சவுத்ரியின் மகள்.

அவர்கள் வந்து பார்க்கும்போது கையில் கத்தி ஒன்றை வத்திருந்திருக்கிறார் சவுத்ரி.

ஆகவே, மருத்துவ உதவிக் குழுவினர் பொலிசாரை அழைத்துள்ளனர். பொலிசார் வந்ததும், தங்களையும் பொலிசாருடன் அவர் இருந்த அறைக்குள் அனுமதிக்கக்கோரியுள்ளனர் சவுத்ரி குடும்பத்தினர்.

அவர் பொலிஸ் உடையைக் கண்டால் பயப்படுவார், பொலிசாருக்கு அல்ல என்றும்எச்சரித்துள்ளனர் குடும்பத்தினர்.

ஆனாலும், அறைக்குள் நுழைந்த பொலிசார் அவரைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள்எடுத்தும் அவர் கட்டுப்படாததால் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே பலியானார் சவுத்ரி.

GETTY IMAGES

அவர் மன நல பாதிப்பு உள்ளவர் என்பது தெரிந்தும், உதவிக்காக அழைக்கப்பட்டவர்களே அவரை கொலை செய்ததால் குடும்பத்தினர் உட்பட அப்பகுதி மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

இதனால் சவுத்ரி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரொரன்றோ பகுதியில் மக்கள் பேரணிகளில் இறங்கினர்.

மன நலம் பாதிக்கப்பட்டோரை எப்படி அணுகவேண்டும் என பயிற்சி எடுத்தும் பொலிசார் மன நலம் பாதிக்கப்பட்டவர் ஒருவரை கொலை செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

புகார்களைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

GETTY IMAGES

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்