ஒன்றாரியோ பண்ணையில் வேலை பார்க்கும் 217 பேருக்கு கொரோனா தொற்று: மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்!

Report Print Balamanuvelan in கனடா

ஒன்றாரியோவிலுள்ள பண்ணை ஒன்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பணியாற்றி வரும் நிலையில், அங்கு பணியாற்றியவர்களில் மூன்றாவது புலம்பெயர் தொழிலாளர் உயிரிழந்துள்ளார்.

Scotlynn குழுமம் என்னும் அமைப்புடன் ஒன்றாரியோவிலுள்ள பண்ணை ஒன்றில் பணியாற்றிவரும் பணியாளர்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 217 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை The Haldimand-Norfolk சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.

தற்போது புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், அவரைக் குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

தற்போது கொரோனாவுக்கு பலியாகியுள்ளவருடன் சேர்த்து இதுவரை மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே மே மாதம் 31ஆம் திகதி மெக்சிகோவைச் சேர்ந்த Bonifacio Eugenio Romero (31) என்பவரும், ஒரு வாரத்திற்குப் பின் Rogelio Muñoz Santos (24) என்பவரும் கொரோனாவுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

அந்த புலம்பெயர் தொழிலாளரின் மரணம் தன்னை கவலையடையச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள Norfolk பகுதி மேயரான Kristal Chopp, தன் குடும்பத்துக்கு உணவளிப்பதற்காக கனடாவுக்கு வேலை தேடி வரும் ஒருவர் தனது அன்பிற்குரியவர்களை விட்டு தொலைதூரம் வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளது உண்மையாகவே மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என்று கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்