ரொரன்றோவில் வெள்ளையின பொலிசார் தாக்கியதில் கண்ணை இழந்த கருப்பின இளைஞர்: ஒன்லைனில் தீர்ப்பை கண்ட 20,000 பொதுமக்கள்!

Report Print Balamanuvelan in கனடா

ரொரன்றோவில் கொரோனா காரணத்தால் கிரிமினல் வழக்கு ஒன்றின் தீர்ப்பை நீதிபதி அளிக்கும் காட்சியை 20,000 பொதுமக்கள் ஒன்லைனில் காணும் ஒரு அபூர்வ சம்பவம் நடைபெற்றது.

Const. Michael Theriault மற்றும் அவரது சகோதரரான Christian Theriault ஆகிய இருவர் மீதும், Dafonte Miller (19)என்னும் கருப்பின இளைஞரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தாக்குதலில் Millerஇன் இடது கண் முற்றிலும் சிதைந்து அவருக்கு பார்வை போனது. என்றாலும், Michael மற்றும் Christian இருவருமே தற்காப்புக்காகத்தான் Millerஐ தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார்கள்.

வழக்கை அலசி ஆராய்ந்த ஒன்ராறியோ உச்ச நீதிமன்ற நீதிபதியான Joseph Di Luca, அதிரடியாக பல விடயங்களை போட்டு உடைத்தார்.

இரு தரப்பினருமே பொய்களை சொல்லியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, முதலில் Miller மறுத்தாலும், அவர் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களிலிருந்து பொருட்களை திருடச் சென்றுள்ளார் என்று கூறினார்.

TORONTO SUN/POSTMEDIA NETWORK

அந்த கார் நிறுத்தப்பட்டிருந்த வீடு Const. Michaelஉடையது. அடுத்ததாக, சத்தம் கேட்டு அங்கு வந்த Const. Michaelம் அவரது சகோதரரும் Millerஐக் கைது செய்ய முயன்றதாகவும், அப்போது Miller ஒரு இரும்புக் குழாயால் தன்னையும் தன் சகோதரரையும் தாக்க வந்ததாகவும், தாங்கள் உயிருக்கு பயந்து தற்காப்புக்காக Millerஐத் தாக்கியதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஒருவேளை Miller இரும்புக் குழாயால் தாக்கியது உண்மையாக இருந்திருக்கலாம் என்று கூறிய நீதிபதி, அதே நேரத்தில், Const. Michaelம் அவரது சகோதரரும் தங்கள் வீட்டிலிருந்த அந்த குழாயால் Millerஐத் தாக்கியிருக்கமுடியும் என்பதையும் மறுக்கமுடியாது என்று கூறினார்.

Const. Michael, Millerஐ இரும்புக் குழாயால் தாக்கியது உண்மைதான் என்று கூறிய நீதிபதி, ஆனால், வெறும் கார் திருட்டுக்காக Millerஐ அவர் கைது செய்ய முயன்றதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

CANADIAN PRESS/FRANK GUNN

அத்துடன், Miller கண்ணில் ஏற்பட்டுள்ள அதிபயங்கர காயம் குழாயால் தாக்கியதால் ஏற்பட்டிருக்க முடியாது என்றார் அவர்.

மருத்துவர்களும், அது ஒருவர் மிக பயங்கரமாக கையால் குத்தியதால் ஏற்பட்ட காயம் என்று கூறியுள்ளார்கள்.

அதாவது, தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள ஒரு பலூன் உடைவதைப் போல, Milleஇன் கண் தாக்கப்பட்டபோது உடைந்து முற்றிலுமாக சிதைந்துள்ளது.

ஆக, அது தற்காப்புக்காக தாக்கியது அல்ல, Millerஐத் தாக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அது.

ஏற்கனவே கருப்பினத்தவர் மீது இனவெறித்தாக்குதல், பொலிஸ் அராஜகம் ஆகியவை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த வழக்கு விசாரணை நிகழ்ந்துகொண்டுள்ளது.

CANADIAN PRESS/COLE BURSTON

இந்த வழக்கிலும் இனவெறித்தாக்குதல் நோக்கம் இல்லையென்று கூறிவிடமுடியாது. அது குறித்து இன்னமும் விசராணை நடத்தவேண்டியுள்ளது என்று கூறிய நீதிபதி, Const. Michael குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்தார்.

அவருக்கு என்ன தண்டனை என்பது இனிதான் முடிவு செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் Miller மீதான குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்