கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன இலங்கை தமிழ்ப்பெண் குறித்து வெளிவந்த அதிகாரபூர்வ தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ்ப்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Sasikumary Amarasingam என்ற 47 வயதான இலங்கை தமிழப்பெண் கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு மாயமானார்.

கடைசியாக அவர் Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டதாக ரொரன்ரோ பொலிசார் தகவல் வெளியிட்டனர்.

இதோடு Sasikumary Amarasingam காணாமல் போன அன்று அணிந்திருந்த உடைகளின் விபரம் மற்றும் அவரின் உயரம் குறித்த தகவலும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் Sasikumary Amarasingam கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காணாமல் போன Sasikumary Amarasingam-ஐ கண்டுபிடித்துவிட்டோம்.

அவரை கண்டுபிடிக்க நாங்கள் வெளியிட்ட டுவிட்டர் பதிவை அதிகளவில் பகிர்ந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்