கனடாவின் முக்கிய பண்ணை மூடல்! 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிகாரிகள் அதிரடி

Report Print Basu in கனடா

மத்திய கனடாவில் உள்ள பெரிய பண்ணை ஒன்று கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது.

மத்திய கனடாவில் உள்ள பெரிய கிரீன்ஹவுஸ் பண்ணையே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. பண்ணையில் வார இறுதியில் கிட்டத்தட்ட 200 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகிய பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லீமிங்டனில் உள்ள நேச்சர் ஃப்ரெஷ் நிறுவனத்தில் சுமார் 360 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 670 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பண்ணையில் பணியாற்றும் 200 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து விண்ட்சர்-எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவினால் குறித்த பண்ணை மூடப்பட்டது என்று விண்ட்சர் ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பண்ணைகளில், குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் பல நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்