கனடாவில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பல்பொருள் மளிகை கடையில் லொட்டரி சீட்டுகள் வாங்கிய பெண்ணுக்கு $150,000 பரிசு விழுந்துள்ளது.

ஒன்றாறியோவை சேர்ந்தவர் ஹீத்தர் பேக்மேன். இவர் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில் ஹீத்தர் சமீபத்தில் பல்பொருள் மளிகை கடைக்கு சென்று அங்கு விற்கபட்ட பொருட்களை வாங்கியதோடு அதே இடத்தில் விற்பனை செய்யப்பட்ட லொட்டரி சீட்டுகளையும் வாங்கினார்.

ஹீத்தர் வாங்கிய லொட்டரிக்கு அவருக்கு $150,000 பரிசு விழுந்துள்ளது, இது குறித்து ஹீத்தர் கூறுகையில், லொட்டரியில் பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த பரிசு பணத்தை வைத்து சில பில் பணத்தை செலுத்துவேன், மேலும் எனக்கு உள்ள கடன் தொகைகளை செலுத்தவுள்ளேன்.

லொட்டரியில் பரிசு விழுந்தது ஒரு அற்புதமான உணர்வு, என் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க போகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்