தந்தையும் மகள்களும் காணாமல் போன வழக்கில் பயங்கர திருப்பம்: தொடரும் மர்மங்களும்...

Report Print Balamanuvelan in கனடா
308Shares

கனடாவில் தந்தையும் மகள்களும் மாயமான வழக்கில் எதிர்பாராத திருப்பமாக, அந்த சிறுமிகள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் (44), தனது மகள்கள் நோரா (11) மற்றும் ரோமி (6) ஆகியோருடன் மாயமானார்.

அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சென்று பார்க்கும்போது, அந்த காரில் யாரும் இல்லை.

பொலிசார் மார்ட்டின் குழந்தைகளை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

இந் நிலையில், St-Apollinaire பகுதியில் சிறுமிகள் நோராவும் ரோமியும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியிலும், அவர்கள் குடும்பத்தினரிடமும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் எப்படி இறந்தார்கள், மார்ட்டின் அவர்களைக் கொன்றாரா என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

மார்ட்டின் மாயமாகிவிட்ட நிலையில், பொலிசார் அவரை பயங்கர ஆபத்தான நபராக கருதி தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ந்து, தாங்களும் மார்ட்டினைப் பிடிக்க களமிறங்கினார்கள்.

ஆனால், அது ஆபத்தானது என்று கருதும் பொலிசார், மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகள் அருகில் யாரவது இருக்கிறார்களா என்று பார்த்தால் மட்டும் போதும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

மொத்த பொலிசாரும் அங்கு குவிந்துள்ள நிலையில், ஹெலிகொப்டர்கள் உதவியுடனும் அவர்கள் மார்ட்டினை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்