ரொரன்றோ உணவகம் ஒன்றில் நடந்த பார்ட்டி: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

ரொரன்றோ உணவகம் ஒன்றில், ஒருவர் கூட கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் பங்குகொண்ட பார்ட்டி ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரொரன்றோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், ஒருவர் கூட மாஸ்க் அணியாமல், சமூக விதிகளை பின்பற்றாமல் பார்ட்டி ஒன்றில் பங்கேற்பது பதிவாகியுள்ளது.

பார்ட்டிக்கு வந்தவர்கள் மட்டுமின்றி, உணவக ஊழியர்களும் ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை.

ட்விட்டரில் வெளியான அந்த வீடியோவை 18,000 பேர் பார்த்துள்ள நிலையில், கொரோனா பரவல் காலகட்டத்தில் கொஞ்சமும் பொறுப்பின்றி நடந்துகொண்டுள்ள அந்த பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் மற்றும் உணவகம் மீது பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் John Tory தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அந்த வீடியோவைப் பார்த்த பலர், அந்த உணவகத்தின் மதுபான விடுதியின் உரிமத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்