கனடாவில் காணாமல் போன 15 வயது சிறுமி சடலமாக மீட்பு! காட்டுப்பகுதியில் கிடைத்த அவரின் உடைகள்

Report Print Raju Raju in கனடா
415Shares

கனடாவில் காணாமல் போன 15 வயது சிறுமி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடக்கு அல்பர்ட்டா பகுதியில் இருந்து தான் சடலத்தை கைப்பற்றியதாக ராயல் கனடியன் மவுண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Roderica Ribbonleg என்ற 15 வயது சிறுமி கடந்த 5-ம் திகதி காணாமல் போயிருந்தார்.

இதை தொடர்ந்து பொலிசார் தேடுதல் வேட்டையை நடத்தியதை தொடர்ந்தே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள காட்டுப் பகுதியில் Roderica Ribbonleg-ன் உடைகள் தனியாக கண்டெடுக்கப்பட்டதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இந்த மரணம் சந்தேகத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரனை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்