நான் மாஸ்க் அணிய மாட்டேன்!.. பிரச்சனைக்கு நடுவே 73 வயது முதியவரை சுட்டுக் கொன்ற பொலிசார்

Report Print Fathima Fathima in கனடா

கனடாவில் மாஸ்க் அணிய மறுத்ததால் 73 வயது முதியவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஒன்றொரியா மாகாணத்தில் உள்ள Minden நகரில் அமைந்திருக்கும் Valu-martக்கு 73 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் போதே அவரை மாஸ்க் அணிந்துகொண்டு வருமாறு கடையின் ஊழியர் கூறியுள்ளார்.

அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்த முதியவரை வெளியே செல்லுமாறு மற்றவர்கள் கூறியுள்ளனர்.

  

இதனால் ஆத்திரமடைந்த அம்முதியவர், காரை எடுத்துக் கொண்டு ஊழியர் மீது மோத முயன்றதில் கடையில் மோதியுள்ளார்.

சட்டென காரில் பறந்த முதியவரை பின்தொடர்ந்த பொலிஸ் அதிகாரிகள், நம்பர் பிளேட்டை கொண்டு அவரது வீட்டு முகவரியை கண்டறிந்தனர்.

அங்கு பொலிசாருடன் முதியவர் கடும் வாக்குவாதம் செய்ய, வேறு வழியில்லாமல் அதிகாரிகள் துப்பாக்கியை பிரயோகித்தனர்.

இதில், முதியவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்தாலும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில், அந்த முதியவர் வித்தியாசமான மனிதர், 8 வருடங்களுக்கும் மேலாக இங்கு வசிக்கிறார்.

அவரை தேடி யாரும் வரமாட்டார்கள், யாருடனும் பேசவும் மாட்டார், தன்னத்தனியாகவே வசித்து வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்