கனடாவில் பயங்கர விபத்து..! சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து உருண்ட கோரம்

Report Print Basu in கனடா

கனேடிய தேசிய பூங்காவில் பனிப்பாறை சுற்றுலா பேருந்து உருண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் தெற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆல்பர்ட்டாவின் ஜாஸ்பர் தேசிய பூங்காவில் உள்ள கொலம்பியா ஐஸ்ஃபீல்ட் அருகே பனிப்பாறைக்கு செல்லும் வழியில் சுற்றலா பேருந்து கவிழ்ந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் அறிக்கை கூறுகிறது.

அதபாஸ்கா பனிப்பாறையின் ஒரு பகுதியாக இருக்கும் ஐஸ்ஃபீல்ட்களில் சுற்றுப்பயணங்களை நடத்தி வரும் பர்சூட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளில் ஒன்றே விபத்துக்குள்ளாகியது.

27 பயணிகளில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், மேலும் பல அவசரகால பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தில் விரைந்துள்ளதாக ராயல் கனடிய மவுண்டட் பொலிஸ் (ஆர்.சி.எம்.பி) மேற்கோளிட்டு அறிக்கை கூறியுள்ளது.

பலத்த காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திலிருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் பல்வேறு ஆல்பர்ட்டா மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

ஆல்பர்ட்டா சுகாதார சேவை செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி மாகாணத்தில் உள்ள பல மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க தயாராகி வருவதாகவும், சிலர் ஆபத்தான அல்லது மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

விபத்து ஆய்வாளரின் உதவியுடன் ஆர்.சி.எம்.பி பேருந்து உருண்டு விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்