கனடாவில் போதையில் இரவு நேரத்தில் கார் ஓட்டிய பெண்ணால் உயிரிழந்த 8 வயது சிறுமி! வெளிவந்த பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மது போதையில் கார் ஓட்டிய பெண்ணால் ஏற்பட்ட விபத்து காரணமாக 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கனடாவின் லண்டன் நகரில் கார் ஒன்றில் 8 வயது சிறுமி உள்ளிட்ட நால்வர் சில தினங்களுக்கு முன்னர் இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரில் வந்த கார், நால்வர் பயணித்த கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 8 வயது சிறுமி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், மற்ற மூவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக Alicia Van Bree என்ற 33 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.

அவரை பரிசோதனை செய்தபோது இரத்தத்தில் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக ஆல்கஹால் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்ட Alicia Van Bree நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் திகதி ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்