கனடாவில் பராமரிப்பாளர் பிடியில் இருந்து தப்பி ஓடிய 13 வயது சிறுமி! புகைப்படத்துடன் முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பராமரிப்பாளரிடம் இருந்து தப்பி ஓடிய 13 வயது சிறுமி தொடர்பில் பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

Cochrane நகரை சேர்ந்தவர் Tianna "TT" Medicine Shield. 13 வயது சிறுமியான இவர் கடந்த 19ஆம் திகதியில் இருந்து மாயமானார்.

பராமரிப்பாளரின் கண்பார்வையில் இருந்த Tianna "TT" Medicine Shield திடீரென தப்பி ஓடியுள்ளார்.

சிறுமி Tianna 5 அடி உயரம் கொண்டவர் எனவும், பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என்றும் விவரிக்கப்படுகிறார்.

அவர் கடைசியாக சாம்பல் நிற ஸ்வெட்டர், கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி Tianna-வின் பாதுகாப்பை உறுதி செய்து அவரை விரைவில் கண்டுபிடிக்க பொலிசார் முயன்று வருகின்றனர்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறலாம் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்