கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிகள்... தந்தைக்கு நேர்ந்த கதியால் வெளிவராமலே போன உண்மைகள்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் கியூபெக்கில் தங்கள் தந்தையுடன் மாயமான சிறுமிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அந்த மர்மம் வெளிவராமலே போய்விட்டது.

கியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் கார்பென்டியர் (44), தனது மகள்கள் நோரா (11) மற்றும் ரோமி (6) ஆகியோருடன் மர்மமான முறையில் மாயமானார்.

வீட்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளானதாக தகவலறிந்து பொலிசார் அங்கு சென்றபோது, அந்த காரில் யாரும் இல்லை.

தந்தையையும் மகளையும் பொலிசார் வலைவீசித் தேடிய நிலையில், மூன்று நாட்களுக்குப்பின் சிறுமிகள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.

மார்ட்டின் கிடைத்தால் மட்டுமே அந்த சிறுமிகள் எப்படி இறந்தார்கள் என்பது சரியாக தெரியவரும் என்பதால் அவரை தீவிரமாக தேடி வந்தனர் பொலிசார். இந்நிலையில், சுமார் இரண்டு வார தேடுதல் வேட்டைக்குப்பின் மார்ட்டினும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு பொதுமக்களில் ஒருவர், ஒரு உடல் கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசாரும் அப்பகுதி மக்களும் அந்த உடல் கிடந்த இடத்தில் கூடினர்.

மார்ட்டின் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். இந்த செய்தியை பொலிசார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், மக்கள் மார்ட்டின் இறந்ததற்கு ரியாக்ட் செய்த விதம் வித்தியாசமாக இருந்தது.

மார்ட்டின் உயிரோடு கிடைப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் சிறுமிகள் எப்படி இறந்தார்கள் என்ற உண்மை வெளிவரும் என்பதால் அப்படி எண்ணினோம். ஆனால், உண்மை வெளிவராமலே போய்விட்டது.

இருந்தாலும், இவ்வளவு நாளும் பயந்துகொண்டே தூங்கியதுபோல் இனி தூங்கவேண்டியதில்லை.

எங்கள் பிள்ளைகள் இனி பத்திரமாக இருப்பார்கள். அந்த கொடூரன் இறந்துவிட்டான் என்பதால், நடந்ததை மறந்துவிட்டு இனி நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்