எனக்கு என் காதலி வேண்டும்... கனடா பேருந்து விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் காதலர் கதறல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பனிப்பாறை ஒன்றைக்காண்பதற்காக சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தார்கள், பலர் படுகாயமடைந்தார்கள்.

இந்த விபத்தில் தன் காதலியை பறிகொடுத்த Devon Ernest (23), அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால் தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டாள் என்கிறார்.

தன் காதலி Dionne Jocelyn Durocher (24)உடன் North Battlefordஇல் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறார் Ernest.

மலைகளை பார்த்தே இராத தன் காதலியையும், தன் சகோதரி ஒருவரையும் அழைத்துக்கொண்டு, தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஆல்பர்ட்டா புறப்பட்டபோதுதான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு சரிவில் செல்லும்போது, திடீரென பேருந்தின் முன் பக்க சக்கரங்கள் தேயும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார் Ernest.

இத்தனைக்கும் மலைப்பாதையில் செல்வதற்கேற்ற வகையில் பிரமாண்ட சக்கரங்கள் கொண்ட பேருந்து அது.

அடுத்து, தூக்கி வீசப்பட்டு, தலை பேருந்தில் மேல் பகுதியில் மோதி நினைவிழந்து, பின் நினைவு வந்தபோது தன் அருகே தன் காதலி Dionne கிடப்பதைப் பார்த்திருக்கிறார் Ernest.

அவருக்கு லேசாக மூச்சு வருவதைப் பார்த்ததும், தன் சகோதரியை தேடிச் செல்ல, அவர் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துகொண்டபின், மீண்டும் தன் காதலியைக் காணவந்த Ernestக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஆம், Dionne இறந்து கிடந்திருக்கிறார்.

நாடித்துடிப்பையும் மூச்சையும் பரிசோதித்து, அவருக்கு உயிரில்லை என்பது தெரிந்ததும், அவரது தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் கதறியிருக்கிறார் Ernest.

அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால், தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டார் என்று கூறும் Ernest, எனக்கு என் காதலி வேண்டும் என கதறுவதைப் பார்த்தால் கல் மனமும் கரைந்துபோகும்.

வீடியோவை காண

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்