கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிக்கை

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன 28 வயது தமிழ் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ செய்தி அறிக்கையை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Arooran Sritharan என்ற 28 வயது இளைஞன் கடந்த 23ஆம் திகதி பகல் 12 மணிக்கு மாயமானார்.

அவர் கடைசியாக Port Union Road and Lawrence Avenue East பகுதியில் காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இதோடு அவரின் உடல்வாகு குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் Arooran Sritharan தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று இரவு 10.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிசார் தங்கள் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் Arooran Sritharan தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்