தாயின் குரலை பொம்மைக்குள் மறைத்து வைத்திருந்த கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வாழும் ஒரு பெண், தன் தாய் உயிரிழக்கும் முன் கடைசியாக தன்னிடம் பேசிய வார்த்தைகளை பதிவுசெய்து ஒரு பொம்மைக்குள் வைத்திருந்திருக்கிறார்.

Mara Soriano (28) என்னும் அந்த பெண், வான்கூவரில் உள்ள ஒரு வீட்டுக்கு, தனது காதலருடன் வீடு மாற்றிச் செல்லும்போது அந்த பொம்மை இருந்த முதுகுப்பையை வேனின் அருகில் வைத்திருந்திருக்கிறார்.

இதற்கிடையில், வீடு மாற்றுவதற்கு Maraவுக்கு உதவுவதற்காக வந்துகொண்டிருந்த ஒரு நண்பரின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக தகவல் வர, அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்.

அப்போது, தான் தனது முதுகுப்பையை வேன் அருகில் சாலையிலேயே விட்டு சென்றதை தனது காதலரிடம் கூற மறந்துவிட்டிருக்கிறார் Mara.

Mara நண்பருடன் திரும்ப வந்து பார்க்கும்போது அந்த முதுகுப்பையைக் காணோம்.

அதில் Maraவின் தாய் Marilyn தான் உயிரிழப்பதற்கு முன், பேச்சு நன்றாக வரும்போது பேசிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார் Mara. Marilyn சென்ற ஆண்டு ஜூன் மாதம் புற்றுநோயால் இறந்துபோனார்.

இறப்பதற்கு முன், அவர் Maraவிடம், நான் உன்னை நேசிக்கிறேன், நீ என் மகள் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை, நான் எப்போதும் உன்னோடு இருப்பேன் என்று கடைசியாக கூறிய வார்த்தைகளை பதிவு செய்து, தன் தாயின் ஞாபகமாக அதை ஒரு டெடி பியர் பொம்மைக்குள் இணைத்து வைத்திருந்திருக்கிறார் Mara.

அதற்குப்பின் Marilyn மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, பின்னர் அவரால் சரியாக பேச முடியாமல் போய்விட்டதாம்.

ஆகவேதான் அந்த பொம்மையை பொக்கிஷம்போல் தன் முதுகுப்பையிலேயே வைத்துக்கொண்டு அலைந்திருக்கிறார் Mara.

தற்போது திருடுபோன அந்த பைக்குள், அந்த பொம்மை, காசோலை புத்தகம் ஒன்று, குடியுரிமை அட்டை, அவரது மற்றும் அவரது காதலரின் பாஸ்போர்ட் முதலான பொருட்களும் இருந்துள்ளன.

சம்பவம் நடந்த கட்டிடத்திலுள்ள CCTV கமெராவில், ஒருவர் அந்த பையை எடுத்திக்கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

Mara பொலிசில் புகாரளித்துள்ள நிலையில், பிரபல நடிகரான Ryan Reynolds அந்த பொம்மையை திருப்பிக் கொடுத்தால் 5,000 டொலர்கள் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்