மகள் மாயமானதாக புகாரளித்த பெற்றோர்: மணப்பெண் கோலத்தில் கண்ட பொலிசார்... கனடா வரலாற்றில் முதல் வழக்கு!

Report Print Balamanuvelan in கனடா

தங்கள் மகளைக் காணவில்லை என பெற்றோர் புகாரளித்திருந்த நிலையில் அவர்களது மகள் ஆண் ஒருவருடன் ஜோடியாக நடமாடுவதைக் கண்டுபிடித்தனர் பொலிசார்.

Michel Frank Bouvier (59)ஐ Ashleyக்கு அவரது அத்தை அறிமுகம் செய்யும்போது அவளுக்கு வயது 15.

மனோரீதியான சிகிச்சை அளிப்பவர் என்று எண்ணி தங்கள் வீட்டிலேயே Bouvierக்கு தங்க இடம் கொடுத்துள்ளார் Ashleyயின் அத்தை.

ஒரு நாள் பக்கத்து வீட்டுக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு தெரு முனையில் தனக்காக காத்திருந்த Bouvierஉடன் காரில் Ashley ஏறிக்கொள்ள, Hintonக்கு தப்பியுள்ளனர் இருவரும்.

அங்கு சென்று ஒரு வீட்டில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்துள்ளனர் இருவரும். Ashleyயை நம்பவைப்பதற்காக பாரம்பரிய முறை திருமணம் ஒன்றையும் நடத்தியுள்ளார் Bouvier.

Michel Bouvier/Facebook

தனக்கும் Ashleyக்கும் 40 வயது வித்தியாசம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று கூறி அவளை நம்பவைத்த Bouvier, பின்னர் அவளை உடல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

Bouvierஇன் உடல் கவர்ச்சியில் மயங்கி, அவரை தனது கணவர், தாங்கள் இருவரும் ஆழமான காதலில் இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டிருந்த Ashleyக்கு, பின்னர்தான் அவரது சுய உருவம் தெரியத் தொடங்குயிருக்கிறது.

தன் ஆசைக்கு இணங்காதபோதெல்லாம் Ashleyயை அடித்து நொறுக்கியிருக்கிறார் Bouvier. நெஞ்சின் மேல் ஏறி உட்கார்ந்து, கழுத்தை நெறித்து, அடித்து இரத்தம் வரவைத்து சித்திரவதை செய்தபின்புதான் Ashleyக்கு உண்மை புரிந்திருக்கிறது.

இதற்கிடையில் மகளைக் காணவில்லை என Ashleyயின் பெற்றோர் பொலிசில் புகாரளித்திருந்த நிலையில், Hintonக்கு வெளியே Ashleyயும் Bouvierம் ஜோடியாக செல்லும்போது அவர்களைப் பிடித்து Ashleyயை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்கள் பொலிசார்.

ஆனால், தனக்கும் Bouvierக்கும் என்ன உறவு, தங்களுக்குள் என்ன நடந்தது என்ற விடயங்களை Ashley வெளியே சொல்லாததால், ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக மட்டும் Bouvierஐ கைது செய்துள்ளனர் பொலிசார்.

Janice Johnston/CBC

இதெல்லாம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதாவது 2019 ஏப்ரலில்தான் பொலிசாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் அத்தனை உண்மைகளையும் Ashley சொல்லியிருக்கிறாள், அதன் பிறகுதான் Bouvier மீது எட்டு குற்றச்சாட்டுகள், இரண்டு பாலியல் ரீதியான தாக்குதல்கள், உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் கொலை மிரட்டல் உட்பட, பதிவு செய்யப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேல், கனடா வரலாற்றிலேயே முதல்முறையாக, 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்ததாக Bouvier மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் இளம்பெண்கள் கட்டாயத்திருமணத்தை தடுப்பதற்காக சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்ட பின், சட்டப்பிரிவு 293.2இன் கீழ் கைது செய்யப்படும் முதல் நபராகிறார் Bouvier என்பது குறிப்பிடத்தக்கது.

Michel Bouvier/Facebook

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்