கனடாவில் காணாமல் போயுள்ள டீன் ஏஜ் சிறுமி! கவலையில் உள்ள குடும்பத்தார்... வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போயுள்ள 13 வயது டீன் ஏஜ் சிறுமி குறித்து அவர் குடும்பத்தார் கவலையடைந்துள்ளனர்.

கனடாவின் லண்டன் நகரை சேர்ந்த Teesha Payash என்ற 13 வயது சிறுமி கடந்த 18ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

அவர் கடந்த 26ஆம் திகதி கடைசியாக William and Horton streets பகுதியில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட Teesha 110 பவுண்ட்ஸ் எடை கொண்டவர் ஆவார்.

காணாமல் போன அன்று Teesha சிவப்பு நிற சட்டை மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படி சில தடவை Teesha காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

Teesha பாதுகாப்பு குறித்து குடும்பத்தார் கவலைப்படும் நிலையில் அவர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களிடம் தெரியப்படுத்தலாம் என பொலிசார் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்