கனடா பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு!

Report Print Balamanuvelan in கனடா

வெளிநாடுகளில் அதிக அளவில் கொரோனா தொற்று காணப்படுவதையடுத்து தனது எல்லைகளைத் திறப்பது கனடாவுக்கு கடினமாக இருப்பதால், கனடாவில் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, மேலும் ஒரு மாதம், அதாவது ஆகத்து மாதம் 31ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக அறிவித்துள்ளது கனடா.

மார்ச் மாதத்தின் மத்தியப்பகுதியில், மார்ச் மாதம் 18ஆம் திகதியிலிருந்து பயணக்கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கனடா அறிவித்திருந்தது.

முதலில் ஜூன் மாதம் 30 வரை இந்த பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாத இறுதியில் அது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது, பயணக்கட்டுப்பாடுகள் ஆகத்து 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இப்போதைய சூழலில் யாரெல்லாம் கனடாவுக்கு வரலாம்?
  • கனேடிய குடிமக்கள்
  • நிரந்தர வாழிட உரிமை வைத்திருப்பவர்கள்
  • சில தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள்
  • சில சர்வதேச மாணவர்கள்
  • கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் வைத்திருப்போரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (கணவன் அல்லது மனைவி, சார்ந்து வாழும் குழந்தைகள், சார்ந்து வாழும் பிள்ளைகளின் பிள்ளைகள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர் முதலானோர்).

கனடா பயணக்கட்டுப்பாடுகளை நீட்டிப்பதற்கான முக்கிய காரணம், வெளிநாடுகளில் அதிக அளவிலான கொரோனா தொற்று பரவல் காணப்படுவதால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்