கனடாவில் அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Edmonton நகரின் நெடுஞ்சாலையில் தான் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது.

சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

மருத்துவ உதவி குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்ற முயன்றும் அது முடியாத நிலையில் சம்பவ இடத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

அப்பெண் மீது மோதிய வாகனங்களில் இருந்த நபர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் குறித்த எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே மேலதிக தகவல்கள் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்