சீனாவில் கனடா நாட்டவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?

Report Print Santhan in கனடா
2501Shares

சீனாவில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய கனடா குடிமகனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் Guangzhou நகரில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் Xu Weihong என்ற நபர் குற்றவாளிக்கு மரணதண்டனையும், அவரது கூட்டாளியான Wen Guanxiong-வுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து முழு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது கனேடிய நாட்டவர் இவர் ஆவார்.

இது குறித்து Guangzhou-வில் இருக்கும் உள்ளூர் ஊடகங்கள் Xu Weihong மற்றும் Wen Guanxiong கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் இருந்தே போதை பொருள் தயாரிக்க துவங்கியுள்ளனர். அதன் படி பொலிசார் Xu Weihong வீட்டில் இருந்தும், மற்றொருவரின் முகவரியில் இருந்தும் சுமார் 120 கிலோ எடை கொண்ட போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.

அது கொட்டமைன் என்ற சகதி வாய்ந்த போதை பொருள் என்பதால் கெட்டாமைன் போதைப்பொருளை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து, சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Wang Wenbin,சீனாவின் நீதித்துறை அதிகாரிகள் சீன சட்டத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் இணங்க சம்பந்தப்பட்ட வழக்கை சுயாதீனமாக கையாளுகிறார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த வழக்குக்கும் தற்போதைய சீனா-கனடா உறவுகளுக்கு இடையே இருக்கும் விவகாரத்திற்கும், எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது போன்ற தண்டனை குற்றங்களை தடுக்க உதவும் என்று கூறியுள்ளார்.

மேலும், இதே போன்று கடந்த ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில் இரண்டு கனேடிய நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்