கனடாவில் ஒரே குடும்பத்தில் மூவர் பிரபலமான அருவியில் மூழ்கி பலியான சோகம்: வெளியான புகைப்படம்

Report Print Arbin Arbin in கனடா
1065Shares

கனடாவில் பிரபலமான Crescent அருவியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரபலமான அருவி Crescent. இந்த அருவியிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மூழ்கி இறந்துள்ளனர்.

இறந்தவர்கள் மூவரும் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனவும், செவ்வாய்க்கிழமை அருவியில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இதை கவனித்த குடும்ப உறுப்பினர்கள் இருவரும் காப்பாற்ற முயற்சிக்க, அவர்களும் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மரணமடைந்த இருவருக்கு 38 வயது எனவும் ஒருவருக்கு 25 வயது எனவும் கூறப்படுகிறது. மூவரும் எட்மண்டன் பகுதியில் வசித்து வருகின்றனர்.

மரணமடைந்த 25 வயது அனூப் குமார் ஓத் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார்.

இவரது மாமா டாக்டர் பார்த்தாப் ராய் ஓத்(38), மற்றும் அத்தை வெஞ்சர் ஓத்(38) ஆகியோரும் இந்த விபத்தில் இறந்தனர்.

இதனிடையே இரவு 8 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடி இருவரது சடலங்களை மீட்டுள்ளனர். மூன்றாவது நபரின் சடலமானது புதனன்று சுமார் 2.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

அனூபின் இன்னொரு மாமா திலீப் குமார் ஓத் என்பவரே சடலங்களை அடையாளம் கண்டதுடன்,

அருவியில் ஆபத்தான பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்பது குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என மாகாண நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சம்பவத்தின் போது பார்த்தாப் ராய் மற்றும் வெஞ்சர் தம்பதியின் 3 பிஞ்சு பிள்ளைகள்( வயது 10, 6 மற்றும் 3) கரையில் நின்றபடி வாய்விட்டு கதறியது, அங்கிருந்த மக்களை கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்