கொலை செய்ததே நினைவில்லை என்று கூறிய குற்றவாளி நீதிமன்றம் முன் வைத்த கோரிக்கை!

Report Print Balamanuvelan in கனடா
1067Shares

திங்கட்கிழமையன்று கனடாவில் மருத்துவர் ஒருவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற குற்றவாளி, நடந்தது எதுவும் தனக்கு நினைவில்லை என்றும், தான் ஒரு மருத்துவரை பார்க்கவேண்டும் என்று கூறியதோடு, ஹா ஹா ஹாவென நீதிபதி முன்பே சிரித்தார்.

கனடாவின் Red Deer நகரில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்த Deng Mabiour (54) என்பவர், Walter Reynolds (45) என்னும் மருத்துவரை கோரமாக சுத்தியலால் அடித்துக்கொலை செய்தார்.

அவரை கைது செய்து காவலில் அடைத்த பொலிசார், பின்னர் அவரை நீதிபதி முன் தொலைபேசி வாயிலாக ஆஜர் செய்தனர்.

அவரிடம் அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, தான் கூறுவதை புரிந்துகொள்ள முடிகிறதா என்று கேட்டுள்ளார்.

Travis McEwan/CBC

அதற்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ள Mabiour, தனக்கு எதுவும் நினைவில்லை என்றும், தனக்கு உடல் நலம் சரியானதும் எல்லாம் நினைவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் தான் கூறியதை அழுத்தம் திருத்தமாக கூறிய நீதிபதி, புரிகிறதா என்று கேட்க, Mabiour மீண்டும், எனக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் எனக்கு எதுவும் நினைவில்லை, எனக்கு ஒரு மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு ஹா ஹா ஹாவென சிரித்துள்ளார்.

வழக்கு விசாரணையை சற்று தள்ளி வைத்துவிட்டு, சிறிது நேரத்திற்குப்பின் மீண்டும் நீதிபதி Mabiourஇடம் தான் கேட்டதையே கேட்க, சொன்னதையே திரும்பச் சொல்லியிருக்கிறார் அவர்.

ஆகவே, வழக்கை செப்டம்பர் 9ஆம் திகதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்வதற்கான உதவியை நாடுமாறு அறிவுரை கூறியுள்ளார்.

Facebook

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்