கனடாவின் ரொரன்ரோவில் காணாமல் போயுள்ள தமிழர்! புகைப்படத்துடன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Raju Raju in கனடா
2464Shares

கனடாவில் ரொரன்ரோவில் சிங்கநாயகம் செபமாலை என்ற 81 வயதுடைய முதியவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் இவர் கடைசியாக, Sentinel Road area வில், Finch Avenue West பகுதியில் காணப்பட்டுள்ளார்.

6'0" உயரமும், 170-180 இறாத்தல் எடையும் கொண்ட இவர், கடைசியாக ஒரேஞ் நிற சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தார்.

இவரைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் அது குறித்து தங்களிடம் தெரிவிக்கலாம் என ரொரன்ரோ பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சிங்கநாயகம் புகைப்படத்துடன் ரொரன்ரோ பொலிசார் தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்