விமானத்தின் ஜன்னலில் கீறலைக்கண்டு அதிர்ந்த நபர்: உடனடியாக தரையிறக்கப்படுவோம் என எண்ணிய நிலையில் நடந்த சம்பவம்!

Report Print Balamanuvelan in கனடா
8183Shares

நடுவானில் விமானம் பறக்கும்போது விமானத்தின் ஜன்னல் கீறல் விட்டிருப்பதைக் கண்டு பதறிப்போய் பைலட்டை வரவழைத்தார் பயணி ஒருவர்.

ரொரன்றோவிலிருந்து மொன்றியலுக்கு ஏர் கனடா விமானம் ஒன்றில் பறந்துகொண்டிருந்த Karl Haddad (20), விமானம் ஏறியதுமே நன்றாக தூங்கிவிட்டார்.

திடீரென கண் விழித்து பார்க்கும்போது, தான் தலை சாய்த்து தூங்கிக்கொண்டிருந்த ஜன்னலில் ஒரு பெரிய கீறல் விழுந்திருப்பதைக் கண்டு பதறிப்போய் விமான பணியாளர் ஒருவரை அழைத்து தகவலை சொல்லியிருக்கிறார். அவர் உடனே விமானியை அழைத்துவரச் சென்றிருக்கிறார்.

அவ்வளவுதான், உடனே விமானம் அவசரமாக தரையிறக்கப்படும், சினிமாவில் வருவதுபோல் பெரும் பரபரப்பு ஏற்படப்போகிறது என்று எண்ணி காத்திருந்திருக்கிறார் Karl.

அதேபோல், அந்த பணியாளர் சென்று பைலட்டை அழைத்து வருகிறார், பைலட் அருகே நெருங்க நெருங்க, பதற்றத்தில் சின்னதாக ஒரு மாரடைப்பே ஏற்பட்டதுபோல் இருக்கிறது Karlக்கு.

இதோ பைலட் வருகிறார், உடனே, இப்போது நாம் அவசரமாக தரையிறங்க இருக்கிறோம், பயணிகள் பதற்றப்படவேண்டாம், தடங்கலுக்கு வருந்துகிறோம் என வரிசையாக அறிவிப்புகள் வெளியாகப்போகின்றன என சஸ்பென்சுடன் Karl காத்திருக்கிறார்.

கிட்ட வந்த பைலட், அந்த கீறலைப்பார்த்துவிட்டு, இது ஒன்றும் அவரசமாக அணுக வேண்டிய பிரச்சினையில்லை, கவலைப்படாதீர்கள், முடிந்தவரை மொன்றியலுக்கு சீக்கிரமாக கொண்டுசேர்த்துவிடுகிறோம் என்று கூற, ஏமாற்றமாகிவிட்டிருக்கிறது Karlக்கு.

தனது அனுபவத்தை வேடிக்கையாக நகைச்சுவை உணர்வுடன் Karl சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, 5 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரது வீடியோவை பார்வையிட்டு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்