கனடாவில் மளிகை கடைக்கு பால் வாங்க சென்ற போது கோடீஸ்வரர்களான இளம் தம்பதி! எப்படி தெரியுமா?

Report Print Raju Raju in கனடா
6571Shares

கனடாவில் மளிகை கடைக்கு சென்று பால் வாங்கிய தம்பதி அங்கு லொட்டரி டிக்கெட்டை ஸ்கென் செய்த போது அவர்களுக்கு $500,000 பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் Surreyவை சேர்ந்த தம்பதியான ராபர்ட் ஜோலிபி - மந்தீப் கில் ஆகியோர் பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றிருக்கின்றனர்.

அப்போது தாங்கள் வாங்கிய Daily Grand லொட்டரி டிக்கெட்டை ஸ்கேன் செய்த போது அவர்களுக்கு $500,000 பரிசு விழுந்தது தெரியவந்தது.

பரிசு விழுந்ததை அறிந்ததும் இருவரும் சில நிமிடங்கள் வாயடைத்து போனார்கள்.

இது குறித்து ராபர்ட் கூறுகையில், இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை என்னால் முதலில் நம்பவே முடியவில்லை.

நாங்கள் மளிகை கடையில் வெகுநேரம் நின்று கொண்டிருந்ததை பார்த்த வரிசையில் நின்றவர்கள், நாங்கள் பணப்பையை வீட்டில் வைத்துவிட்டு வந்ததால் பணமில்லாமல் தவித்தோம் என நினைத்தனர்.

ஆனால் பரிசு தொடர்பான விடயத்தை தெரிந்து கொள்ளவே வெகுநேரம் நின்றிருந்தோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்