கனடாவில் நள்ளிரவில் கண்டுப்பிடிக்கப்பட்ட காணாமல் போன 18 வயது இளம்பெண்! புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்

Report Print Raju Raju in கனடா
2424Shares

கனடாவில் காணாமல் போன 18 வயது இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ரொரன்ரோ பொலிசார் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி Alana Joyner என்ற 18 வயது பெண் கடந்த 24ஆம் திகதி மாலை 3.15 மணியளவில் Broadview Av + Withrow Av பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட Alana Joynerவின் வலது கையில் with struggle comes என்ற வார்த்தை டாட்டூவாக குத்தப்பட்டிருக்கும் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Alana Joynerஐ பொலிசார் தேடி வந்த நிலையில் அவரை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நள்ளிரவு 2.25 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alana Joyner-ஐ கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு பொலிசார் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்