கனடா மக்களுக்கு எச்சரிக்கை தகவல்! பாலியல் செயல்பாடுகளின் போது இதை தவிர்க்கும் படி தலைமை சுகாதார அதிகாரி அறிவுறுத்தல்

Report Print Santhan in கனடா

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி உடல் அளவில் நெருக்கமாக இருக்கும் போது, முகக்கவசம் அணியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டவது அலை பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அங்கிருக்கும் ஒரு சில நாடுகளில் இப்போது கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கனடாவிலும் கொரோனாவில் இருந்து தப்பிப்ப்பதற்காக, தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியும், உயர் மருத்துவருமான Theresa Tam கடந்த புதன் கிழமை, உடல் அளவில் நெருக்கமாக இருக்கும் போது, முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

விந்து அல்லது யோனி திரவத்திலிருந்து கொரோனா பரவலுக்கான் வாய்ப்புகள் அதிகம் இல்லை.

ஆனால் புதிய கூட்டாளர்களுடனான பாலியல் செயல்பாடுகளுடன் நாம் ஈடுபடும் போது, அது கொரோனா வைரஸின் அபாயத்தை அதிகரிக்கிறது.

குறிப்பாக முத்தம் கொடுப்பதன் மூலம், இதனால் முத்தத்தைத் தவிர்க்கவும், நேருக்கு நேர் நெருங்குவதைத் தவிர்க்கவும், உங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்,

மேலும் எந்தவொரு பாலியல் செயலுக்கும் முன்னால் அறிகுறிகளுக்காக உங்களையும் உங்கள் கூட்டாளியையும் கண்காணித்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போது வரை உலகசுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தின் படி, கனடாவில் ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்