சீனாவை எதிர்த்தும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் கனடாவில் கூடிய வெவ்வேறு நாட்டவர்கள்: ஒரு வித்தியாசமான நிகழ்வு!

Report Print Balamanuvelan in கனடா

சீனாவை எதிர்த்தும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் கனடாவில் திபெத் நாட்டவர்கள் கூடிய நிகழ்வு ஒன்று நடந்தேறியது.

நேற்று, கனடாவில் வாழும் திபெத் நாட்டவர்கள் சுமார் 300 பேர், உகுர் இனத்தவர்கள் மற்றும் ஹொங்ஹொங் நாட்டவர்களுடன் இணைந்து ரொரன்றோவிலுள்ள சீன தூதரகம் முன்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அத்துடன் லடாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதல்களின்போது உயிரிழந்த, திபெத் வம்சாவளியினரான ராணுவ வீரர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், சீனாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் திபெத்தின் நிலை மீது அதிக கவனம் செலுத்த கனடா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகும் என்கிறார் அந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யும் குழுவில் ஒருவரான Youdon Tsamotshang.

கிழக்கு Turkestanஇல் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ள உகுர் மக்கள், சீனா கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹொங்ஹொங் நாட்டவர்கள்,

திபெத் நாட்டவர்கள் என பல்வேறு குழுக்கள் சீனாவுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் புதனன்று இந்த போராட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்