கனடாவில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் கவர்ந்து பேசி கடத்த முயன்ற நபர்! நடந்த தொடர் சம்பவங்கள்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை காரில் கடத்த முயன்ற சம்பவங்கள் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Greater Sudbury நகரில் தான் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த கடத்தல் முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.

அதன்படி Awale Abdi (34) என்பவர் 12ல் இருந்து 42 வயதுடைய 4 பெண்களை தனித்தனி சந்தர்பங்களில் காரில் பின் தொடர்ந்திருக்கிறார்.

பின்னர் அப்பெண்களிடம் கவரும் வகையில் பேசி காரில் ஏற்ற முயன்ற நிலையில் அவர்கள் மறுத்துள்ளனர்.

இதையடுத்து கோபமாக பேசி கத்தி நால்வரையும் பயத்தில் ஆழ்த்தியிருக்கிறார் என தெரியவந்தது. இந்த சம்பவங்களை தொடர்ந்து Awale Abdiஐ பொலிசார் சமீபத்தில் கைது செய்தனர்.

அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Awale தொடர்பாக யாருக்கேனும் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்