பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வீடு ஒன்றில் பொலிசார் நடத்திய ரெய்டில் ஏராளம் போதைப்பொருள்கள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின் பேரில் இருவரை மடக்கிப்பிடித்த பொலிசார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்டனர்.
அந்த வீட்டில் 3.1 கிலோகிராம் எடையுள்ள fentanyl என்ற பொருளும், 225 கிராம் கொக்கைன் என்ற போதைப்பொருளும், oxycodone வகை மாத்திரைகளும் இருப்பதை அறிந்த பொலிசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
அத்துடன், 100,000 டொலர்கள் பணமும் அந்த வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த அளவு போதைப்பொருட்கள் தெருக்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்குமானால், அவற்றால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஏன் கொலைசெய்யக்கூட பட்டிருக்கலாம் என்கிறார் Ryan Element என்ற பொலிஸ் அதிகாரி.
கைது செய்யப்பட்ட ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில், ரெய்டு நடந்த வீட்டிலிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.