கனடாவில் பயங்கரம்! வீட்டிற்குள் மர்மமாக இறந்து கிடந்த 5 பேர்: குழப்பத்தில் பொலிஸ்

Report Print Basu in கனடா

கனடாவில் டொராண்டோவிற்கு அருகிலுள் நகரத்தில் உள்ள வீட்டில் ஐந்து பேர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், ஓஷாவாவில் உள்ள வீட்டிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் வருவதாக தகவல்கள் கிடைத்தன.

சம்பவ இடத்திற்கு சென்ற போது அதிகமான துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டது. வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​சந்தேக நபர் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

50 வயதான ஒரு பெண் உயிருடன் காணப்பட்டார், ஆனால் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்தவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், சந்தேகநபர் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாக நம்புகிறோம். இந்த நேரத்தில் வேறு எந்த சந்தேக நபர்களும் தேடப்படவில்லை.

நாங்கள் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை, ஏனென்றால் நாங்கள் இன்னும் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் பொலிசார் கூறினார்.

குறித்த வீட்டில் இரண்டு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்தன என அக்கம்பக்கத்தினர் உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்