இலங்கைத் தமிழர்களுக்காக கனடாவில் ஒரு நடை பயணம்

Report Print Balamanuvelan in கனடா

இலங்கையில் காணாமல் போன தமிழர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு அழைப்பு விடுக்கக்கோரி கனேடிய நாடாளுமன்றம் நோக்கி ஐந்து பேர் நடை பயணம் ஒன்றை துவக்கியுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் பிராம்ப்டன் நகர கவுன்சில் முன் ஒன்று திரண்டனர்.

’நீதிக்கான நடைபயணம்’ என்ற அந்த நடைபயணத்தில் ஐந்து பேர் பங்கேற்கிறார்கள். கடந்த சனிக்கிழமையன்று தங்கள் நடை பயணத்தை துவக்கிய அந்த ஐந்துபேரும், 14

நாட்கள், 150 மணி நேரங்கள் நடந்து, 424 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் குறித்த விசாரணை ஒன்றை துவக்கக்கோரி புகார் மனு ஒன்றை அளிக்க இருக்கிறார்கள்.

இம்மாதம் (செப்டம்பர்) 14ஆம் திகதி, அவர்களை நாடாளுமன்ற கட்டிடம் முன்பு அரசியல்வாதிகளும், மனித உரிம ஆர்வலர்களும் வரவேற்க இருக்கிறார்கள். அத்துடன், இலங்கையில் காணாமல் போன 24,000 தமிழர்களுக்காக நீதி கோரி பலர் பதாகைகளை கைகளில் ஏந்தி அமைதிப் பேரணிகளிலும் ஈடுபட்டார்கள்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை அநுசரிக்கும் வகையில் இந்த பேரணிகள் நடத்தப்பட்டன.

பேரணியில் கலந்துகொண்டோருக்கு ஆதரவாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான Ruby Sahota கூறும்போது, எங்கள் அரசு உங்களுடன் தோளுடன் தோள் சேர்த்து நிற்கிறது.

நான் உங்களுக்கு ஆதரவாக நின்று, காணாமல் போனோரின் உயிர்களுக்கு கணக்கு கேட்கும் வகையில் விசாரணை ஒன்றை துவக்குவதை உறுதி செய்வேன் என்றார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்