குடும்பத்துடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்! தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் மீட்பு... முழு தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் ஏரியில் படகு சவாரி சென்ற போது தண்ணீரில் விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஒன்றாறியோவில் உள்ள Simcoe ஏரியில் இரு தினங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் Kenane Tafese Teklemariam (21) என்ற பெண் படகு சவாரி செய்திருக்கிறார்.

அப்போது தண்ணீரில் கால் வைக்க வேண்டும் என நினைத்த Kenane உயிர் கவசத்தை உடலில் அணியாமல் கால் வைத்திருக்கிறார்.

அப்போது தண்ணீரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் நீரில் விழுந்தார்.

அவரின் நண்பர் தண்ணீரில் குதித்து காப்பாற்ற முயன்ற போதிலும் அலைகள் மிகவும் வலுவாக இருந்ததால் Kenane-ஐ காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் மூலம் Kenane உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஒருவழியாக உடல் மீட்கப்பட்டுள்ளது.

Ethiopia நாட்டை சேர்ந்த Kenane கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்