கனடாவில் ஒன்றாக காணாமல் போன இரண்டு 14 வயதுடைய சிறுமிகள்! அவர்களின் நிலை குறித்து வெளிவந்துள்ள தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன இரண்டு சிறுமிகள் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான தகவலை வான்கூவர் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

14 வயதுடைய இரண்டு சிறுமிகள் நகரில் உள்ள மெட்ரோடவுன் மாலில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன பின்னர் சிறுமிகள் அவர்களின் பெற்றோரை உடனடியாக தொடர்பு கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் அந்த இரண்டு சிறுமிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு பேரும் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி காணாமல் போன 14 வயது சிறுமிகள் இருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளனர் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்