நகரின் புதிய கோடீஸ்வரர் நான்! கனடாவில் பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்... என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணொருவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Richmond-ஐ சேர்ந்தவர் Lisa Tsang.இவருக்கு Lotto 6/49ல் $1 மில்லியன் பரிசு விழுந்தது.

இது குறித்து அவர் கூறுகையில், பரிசு விழுந்ததாக எனக்கு தகவல் வந்தபோது, ​​நான் அதிர்ச்சியிலும் அவநம்பிக்கையிலும் இருந்தேன்.

பின்னர் பரிசு டிக்கெட்டை வைத்து பார்த்த போதே அது உண்மை என உணர்ந்தேன்.

இதையடுத்து என் கணவர் மற்றும் மகள் முன்னால் சென்று நான் தான் நகரின் புதிய கோடீஸ்வரர் என கூறினேன்.

ஆனால் அதை இருவரும் நம்பவில்லை, பிறகு லொட்டரி டிக்கெட்டை காட்டிய பின்னரே நம்பினார்கள்.

பரிசு பணத்தை வைத்து முதலில் அடமான கடன்களை அடைக்கவுள்ளேன். $1 மில்லியன் என்பது பெரிய பணம் என்பதை நன்கு அறிவேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்