தேவாலயத்திற்கு சென்ற ரோபோ: அறிவியலும் ஆன்மீகமும் சந்தித்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

Report Print Balamanuvelan in கனடா

கனடா தேவாலயம் ஒன்றில் அறிவியலும் ஆன்மீகமும் சந்தித்த ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

ஆம்! மக்கள் தேவாலய பிரார்த்தனைகளில் ஈடுபடும்போது கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக ஒரு ரோபோ தேவாலயத்திற்குள் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

ரொரன்றோவுக்கு வெளியே Woodbridge என்ற இடத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் ட்ரோனுக்கு நடுவே சிலுவை போன்ற அமைப்புடன் காணப்படும் அந்த ரோபோ 30 நாட்களுக்கு வைரஸ்களையும் பாக்டீரியங்களையும் அண்டவிடாமல் தடுக்கும் திறன் வாய்ந்த கிருமி நாசினி ஒன்றைத் தெளித்தது.

பல தேவாலயங்கள் கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பாக ஆராதனைகள் நடத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தவண்ணம் இருந்தன.

பல தேவாலயங்களில் ஆராதனை ஒன்லைனில் நேரலையில்தான் ஆராதனை நடத்தப்பட்டது.

பின்னர் தேவாலயங்களில் கூட ஆரம்பித்தபின், சமூக இடைவெளியை பின்பற்றுவது, பாடல்களை தவிர்ப்பது என பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆராதனைகள் நடத்தப்பட்டன.

தற்போது இந்த ரோபோ பயன்படுத்தப்படும் தேவாலயத்தில் மக்கள் கூடும்போது, ஒருவர் தும்மினால் கூட, அறையில் இருக்கும் கிருமிநாசினி அதை அழித்துவிடும் என்பதால் இனி கவலையில்லை என்கிறார் பாதிரியார் John L. Borean.

PHOTO BY COURTESY SPARTA GROUP

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்