மாயமான இளம்பெண்... வானில் வட்டமிட்ட பறவைகள்: தேடிச் சென்றவர்கள் கண்ட பரிதாப காட்சி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இளம் தாய் ஒருவர் தன் குழந்தைக்கு முத்தமிட்டு விடை கொடுத்துவிட்டு தன் பாட்டியிடம் வெளியே செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

அதன் பிறகு பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Jessica Patrick-Balczer (18) என்ற அந்த இளம்பெண் வீடு திரும்பவேயில்லை.

பொலிசார் எவ்வளவோ தேடியும் அவர் கிடைக்காத நிலையில், சுமார் 15 நாட்களுக்குப் பிறகு Jessicaவின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் Smithers என்ற பகுதிக்கு அருகிலுள்ள, மக்கள் பனிச்சறுக்கு செல்லும் இடத்துக்கு வந்திருக்கிறார்.

அவர் மனதுக்குள் ஏதோ தோன்றியிருக்கிறது, ஏதோ அவரை அங்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்கிறார் அந்த பெண்மணியின் மகளும், Jessicaவின் சகோதரி முறை உறவு கொண்டவருமான Jacquie Bowes.

Jacquie Bowes/Facebook

அப்போது, ஒரு இடத்தில் பறவைகள் வட்டமிடுவதைக் கண்டு குடும்பத்தினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளார்கள்.

அங்கு சென்று பார்த்தால், அங்கே Jessicaவின் உயிரற்ற உடல் கிடந்திருக்கிறது. தான் தன் குழந்தைக்கு கடைசியாக முத்தமிட்டு விடைபெற்றபோது அணிந்திருந்த அதே உடையிலேயே இறந்துகிடந்திருக்கிறார் Jessica.

பொலிசார் அத்தனை நாட்களாக தேடியநிலையிலும் Jessicaவின் உடல் கிடைக்காத நிலையில், அவரை யாரோ அங்கு தூக்கிக்கொண்டு வந்து போட்டிருக்கவேண்டும் என்று நம்புகிறார் Bowes.

Jessicaவின் தலை முடி முகத்தை மறைக்க, அவரது சட்டை அவரது மார்புக்கு கீழே, சற்று மேல் நோக்கி தள்ளப்பட்டிருந்ததாகவும், ஒரு பெண்ணை யாராவது தூக்கிக்கொண்டு வந்தால் அப்படி சட்டை மேல் நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும் கருதுகிறார் Bowes.

ஆனால், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், யாரும் கைது செய்யப்படவில்லை.

பொலிசார் தாங்கள் தீவிரமாக குற்றவாளியைத் தேடி வருவதாக இரண்டாண்டுகளாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

கனடாவில் காணாமல் போன பல பூர்வக்குடியின பெண்களின் வழக்கைப்போலவே தனது உறவினரும் வழக்கும் முடிவடையாமலே போய்விடுமோ என அஞ்சுகிறது Jessicaவின் குடும்பம்.

Facebook

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்