கனடாவில் பயங்கரம்... வீடு புகுந்து நடந்த கொலைவெறித் தாக்குதல்: இரத்தவெள்ளத்தில் சரிந்த நால்வர்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து தந்தை மற்றும் அவரது மூன்று பிள்ளைகளை சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்த குடும்ப உறுப்பினர் ஒருவர்.

கனடாவின் ஒஷாவா பகுதியில் வெள்ளிக்கிழமை பகல் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமது குடும்பத்து உறுப்பினர்கள் நால்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு 48 வயதான மிட்செல் லாபா என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தர்ஹாம் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் கொல்லப்பட்டவர்கள், 50 வயதான கிறிஸ் ட்ரெய்னர் அவரது குழந்தைகள் பிராட்லி(20); அடிலெய்ட்(15); ஜோசப்(11) என தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் படுகாயமடைந்த 50 வயதான லோரெட்டா ட்ரெய்னர் என்பவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள பொலிசார் இதன் பின்னால் உள்ள நோக்கத்தை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் காயத்துடன் தப்பிய லோரெட்டா ட்ரெய்னர் என்பவரின் சகோதரரே துப்பாக்கிச் சூடு நடத்திய மிட்செல் லாபா என்பதால், குடும்ப தகராறு ஏதும் காரணமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்