கனடாவில் தெற்காசிய நாட்டவர்களை குறிவைத்து தாக்குதல்: அடுத்தடுத்து நான்கு சம்பவங்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் கடந்த இரு வாரங்களில் மட்டும் தெற்காசிய நாட்டவர்களை குறிவைத்து நான்கு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய சந்தேக நபர் குறித்து தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி லேக்ஷோர் பவுல்வர்டு மேற்கு மற்றும் லெஜியன் சாலையில் தெற்காசிய நாட்டவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது, அந்த சந்தேக நபர் ஒரு பொருளை கையில் வைத்துக் கொண்டு, 32 வயதான ஒருவரை நோக்கி இனரீதியாக இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் பொலிசாரஒ அழைக்க முயன்றதாகவும் ஆனால் சந்தேக நபர் அந்த தொலைபேசியை எடுத்து தரையில் வீசியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வீசப்பட்ட மொபைலை எடுத்துகொண்டு அந்த 32 வயது தெற்காசிய நாட்டவர் அங்கிருந்து தப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாள் முன்னர், லேக் ஷோர் பவுல்வர்டு மேற்கு மற்றும் இருபத்தி ஒன்பதாவது தெரு பகுதியில் 26 வயது பெண்ணுடன் நடந்து சென்று கொண்டிருந்த 27 வயது இளைஞரை அந்த சந்தேக நபர் அணுகியதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து அந்த இளைஞரை அந்த நபர் சரமாரியாக தாக்கியதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய திகதிகளில் இதேபோன்ற இரண்டு சம்பவங்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டன,

இதில் ஒரு சம்பவம் 21 வயது இளைஞரை அவரது தலைப்பாகையை அகற்றுவதற்கு முன்பு அந்த நபர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்