வீட்டில் மலைப்பாம்பை வளர்த்த நபர்: தூங்கும்போது தப்பிய பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ஒருவர் செல்லப்பிராணியாக மலைப்பாம்பு ஒன்றை வளர்த்துவந்த நிலையில், அதை வீட்டில் அடைத்து வளர்ப்பது அந்த பாம்புக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, அதன் உரிமையாளர் தூங்கும்போது நைசாக தப்பிவிட்டது.

ஆனால், ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி அது விக்டோரியாவில் கார் ஒன்றிற்கு கீழே இருப்பது தெரியவரவே, அதை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அவர் அதை தன் முதுகுப்பையில் வைத்திருதிருக்கிறார்.

ஆனால், அந்த பாம்புக்குதான் வீட்டிலிருப்பது பிடிக்கவில்லையே! ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி, மீண்டும் சுதந்திரத்தை நோக்கி பயணத்தை துவங்கியுள்ளது அந்த பாம்பு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அந்த பாம்பு ஒரு வீட்டின் புல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், இம்முறை அது உயிருடன் இல்லை! 1.5 மீற்றர் நீளமுள்ள அந்த மலைப்பாம்பின் உடலைப் பார்த்து, அது தனது பாம்புதான் என உறுதி செய்தார் அதன் உரிமையாளர்.

தான் ஆசைப்பட்டபடியே கூண்டிலிருந்து மட்டுமல்ல, உலக வாழ்க்கையிலிருந்தே விடுபட்டுவிட்டது அந்த பாம்பு!

Provided by The Canadian Press

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்