ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை: தந்தை செய்த செயலுக்காக சகோதரி குடும்பம் பழிவாங்கப்பட்டதா?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளி சுட்டுக்கொல்லப்பட்டவரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஒன்ராறியோவைச் சேர்ந்த Chris Traynor(50)இன் வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், அவரையும் அவரது பிள்ளைகளான Bradley(20) Adelaide (15) மற்றும் Joseph (11) ஆகியோரையும் சுட்டுக்கொன்றார்.

Chrisஇன் மனைவியான Loretta Traynorக்கும் காயம் ஏற்பட்டது, ஆனால் அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லை.

பின்னர் துப்பாக்கியால் சுட்ட நபர், தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையில், இந்த கோர சம்பவத்தை அரங்கேற்றியது Mitchell Lapa (48) என்ற நபர் என்பதும், அவர் Chrisஇன் மனைவியான Lorettaவின் சகோதரர்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் Lorettaவின் தந்தை Traynor எழுதி வைத்துள்ள உயில் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் Loretta மற்றும் அவரது சகோதரர் Lapaவுக்கு தனது சொத்தில் என்னென்ன கொடுக்கவேண்டும் என அவர்களது தந்தையான Traynor விவரித்துள்ளார்.

தனது சொத்து முழுவதையுமே Lorettaவுக்கு எழுதி வைத்துள்ள Traynor, அவரது சகோதரர் Lapaவுக்கு வெறும் 30,000 டொலர்கள் மட்டுமே எழுதிவைத்துள்ளார்.

தற்போது நடந்துள்ள கொலைகளுக்கும் இந்த உயிலுக்கும் சம்பந்தம் உள்ளதா என பொலிசாரைக் கேட்டபோது, அந்த உயில் குறித்து தங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ள பொலிசார், ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இப்போதைக்கு அது குறித்து எதுவும் கூறமுடியாது என்று கூறிவிட்டார்கள்.

இதற்கிடையில், குடும்பத்தில் நான்கு பேரைக் கொன்ற Lapa, தன் சகோதரியை கொல்லாமல் விட்டதும் வேண்டுமென்றே செய்த செயல்தான் என ஒரு கருத்து நிலவுகிறது.

Loretta உயிருடன் இருந்தே காலமெல்லாம் வேதனை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே, Lapa அவரை உயிருடன் விட்டதாகவும் கருதப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்