கனடாவில் விரைவில் திருமணம் நடக்கவிருந்த பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் விரைவில் திருமணம் நடக்கவுள்ள பெண்ணுக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Port Severn-ஐ சேர்ந்தவர் Stephanie Thompson (36).

இவருக்கு தான் LOTTO MAX லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து Stephanie கூறுகையில், எனக்கு பரிசு விழுந்த லொட்டரி கடையின் உரிமையாளர் என் நண்பர் தான்.

அவர் தான் பரிசு விழுந்ததை என்னிடம் சொன்னார், இதை கேட்டதும் நான் செய்வதறியாது அழ தொடங்கினேன், பின்னர் அங்கிருந்தவர்கள் வந்து எனக்கு வாழ்த்து கூறினார்கள்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை என்னை திருமணம் செய்து கொள்ளவுள்ள வருங்கால கணவரிடம் போன் மூலம் கூறினேன்.

ஆனால் அவர் நம்பவே இல்லை, பின்னர் கடை உரிமையாளர் சொன்ன பிறகே நம்பினார்.

தற்போது தான் தொழில் தொடங்கியுள்ளேன், பரிசு பணத்தை அதில் முதலீடு செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்