குடியுரிமை கோரி விண்ணப்பித்த வெளிநாட்டவர்களுக்கு கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Report Print Balamanuvelan in கனடா
848Shares

கனடாவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கொரோனா பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கனடா அரசு, கொரோனா காரணமாக மார்ச் மாதம் 14ஆம் திகதி குடியுரிமை தேர்வுகள், மறு தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை ரத்து செய்தது.

அதனால் கனேடியர்களாகும் தங்கள் இலக்கு கால வரையரையின்றி தாமதமாகலாம் என புலம்பெயர்ந்தோர் பலர் அஞ்சுகின்றனர்.

துருக்கியிலிருந்து கனடாவுக்கு அகதியாக வந்த Basel Masri, அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

புகலிடம் கோரி விண்ணப்பித்த மற்றவர்களைப் போலவே, தினமும் ஒன்லைன் போர்ட்டலில் தனது குடியுரிமை விண்ணப்பத்தின் நிலையை சோதிக்கும் Masri, அது இன்னமும் பரிசீலனையிலேயே (in process) உள்ளதாக தெரிவிக்கிறார்.

தங்களுக்கு தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாததே தனக்கு மனக்கவலையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

கனேடிய குடிமக்களாகும் நாளைக் குறித்த கனவிலேயே இருந்த தங்களுக்கு அந்த எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றமாகிவிட்டதாக தெரிவிக்கிறார் அவர்.

Masriயைப் போலவே குடியுரிமை கோரி விண்ணப்பித்த பலருக்கும் இந்த கொரோனா ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்