பள்ளிகள் திறந்து சில நாட்களில் கனேடிய தலைநகரில் பல பள்ளிகள் மூடல்

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய தலைநகர் ஆட்வாவில் பள்ளிகள் திறந்து சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் மீண்டும் பல பள்ளிகள் மூடப்பட்டாயிற்று.

38 பேருக்கு கொரோனா, மூன்று இடங்களில் வெடித்துக் கிளம்பிய தொற்று, என கல்வியாண்டு தொடங்கியதுமே பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

சமீனா கலீலுக்கு இரண்டு பிள்ளைகள், இருவருமே Broadview Avenue Public School என்ற பள்ளியில் படிக்கிறார்கள். நேற்று அவருக்கு பள்ளியிலிருந்து ஒரு தகவல் வந்தது, பள்ளியுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதுதான் அந்த செய்தி.

இன்னும் பள்ளி துவங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறும் சமீனா என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒருவருக்கு கண்டறியப்பட்ட தொற்று எவ்வளவு சீக்கிரம் அவருடன் தொடர்பிலிருந்த மற்றவர்களுக்கு பரவ முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி என்கிறார்.

பள்ளியிலிருந்து ஒருவேளை செய்தி ஏதவாது வந்தால் என்ன செய்வது என்பதற்காக, தனது மொபைலை தன்னருகிலேயே வைத்துக்கொண்டு, நேற்று முழுவதும் அமர்ந்திருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.

எனக்கு ஒரு பொறுப்பும் இருக்கிறது என்று கூறும் சமீனா, எனது மகனுக்கு ஒரு வேளை வெளியே தெரியாத வகையில் கொரோனா இருந்து, அவனுக்கு தெரியாமலே அவன் மற்றவர்களுக்கு கொரோனாவைப் பரப்புபவனாக இருந்தால் என்ன செய்வது, நான் அதில் பங்குவகிக்க விரும்பவில்லை என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்